அதிர்ச்சி.. கையை உடைத்து அம்மாவை சுடுக்காட்டில் விட்டுச்சென்ற கொடூர மகன்..!!

 
சுடுகாட்டில் மூதாட்டி

உடல்நிலை பாதிக்கப்பட்ட 70 வயதான தாயை, அவரது மகனே சுடுகாட்டுக்கு கூட்டி வந்து அனாதையாக விட்டுச் சென்ற கொடூர சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது. 

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் மிரியாளகுடெம் எரவுல பாடு கிராமத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி வெங்கட்ரமனம்மா. இவருக்கு கணவர் ஏடுகொண்டாலு, மகன் வெங்கடேஷ் மற்றும் ஒரு மகள் ஆகியோர் உள்ளனர்.இந்நிலையில், மூன்று நாட்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த மூதாட்டி வெங்கட்ரமனம்மாவை அவருடைய மகன் வெங்கடேஷ், மருமகள் ஆகியோர் சேர்ந்து அடித்து துன்புறுத்தி கையை உடைத்துள்ளனர். தொடர்ந்து, ஆட்டோவில் அழைத்து வந்து மிரியாளகுடெம் அருகே உள்ள சுடுகாட்டில் தனியாக விட்டுச்சென்றுள்ளனர். 

சுடுகாட்டில் வளர்க்கப்படும் மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக நகராட்சி ஊழியர்கள் அங்கு சென்றுள்ளனர்.  அப்போது மூதாட்டி, வெங்கட்ரமனம்மா அங்கு தனியாக படுத்து கிடப்பதை பார்த்த ஊழியர்கள் அவரிடம் நடந்த சம்பவம் பற்றி விசாரித்துள்ளனர். வெங்கட்ராமனம்மாவும் தன்னை பற்றி விவரங்கள் முழுவதையும் அவர்களிடம் தெரிவித்தார். இது பற்றி ஊழியர்களும் அந்த கிராமத்தின் தலைவருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த கிராமத்தலைவர் அதே பகுதியில் சுடுகாட்டு ஊழியர்கள் தங்குவதற்காக போடப்பட்டிருக்கும் தகர ஒட்டகையில் வெங்கட்ரமனம்மாவை தங்க வைத்து இது பற்றி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.

கிராம பஞ்சாயத்து தலைவர் அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற நகராட்சி அதிகாரிகள் வெங்கட்ரமனம்மாவை மீட்டு, அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். வெங்கட்ரமனம்மாவின் கணவர், மகன், மகள் ஆகிய குடும்ப உறுப்பினர்களுக்கு அதிகாரிகள் கவுன்சிலிங் கொடுத்து வருகின்றனர். மேலும் இதுபோல் இனிமேல் நடைபெற்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வெங்கட்ரமணம்மா உறவினர்களை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

From around the web