மார்பில் ஒரே குத்து... நடுரோட்டில் போலீசார் அடித்ததில் கால்டாக்ஸி ஓட்டுநர் பலியான சோகம்!

 
மதுரவாயல் காவல் நிலையம்

அதிகாரமும் பதவியும் கைக்கு வந்ததும் இவங்க போடுகிற ஆட்டம் இருக்கே... என்று கவுன்சிலர், வார்டு பாய் துவங்கி பெரிய பதவிகளில் இருக்கும் அரசியல் தலைவர்களைப் பற்றி எல்லாம் பேசுகிறோம். அரசு ஊழியர்களுமே அப்படி தானே இருக்கிறார்கள்.

பல இடங்களில் பள்ளி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள், வங்கிகளில்  மேனேஜர், தாசில்தார் துவங்கி ப்யூன் வரை அதிகாரத்தில் இருப்பவர்கள் பல இடங்களில் அத்துமீறி அடுத்தடுத்தவர்களைத் துன்புறுத்துவதைப் பார்க்கிறோம் தானே. அப்படி அதிக இன்னல்களைத் தருபவர்களாக பல இடங்களில் காவல்துறையினர் மாறி வருவது பெரும் சோகம்.

சென்னை மதுரவாயல் அருகே கால் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் போலீசாரால் கொல்லப்பட்ட வழக்கில் கார் டிரைவர் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக தலைமைக் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரவாயல் காவல் நிலைய தலைமைக் காவலர் ரிஸ்வான் நேற்று இரவு கால் டாக்சி டிரைவர் ராஜ்குமாரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் பெண்ணுடன் நின்று கொண்டிருந்த கால்டாக்சி டிரைவர் மர்மமான முறையில் இறந்தார். போலிஸாரின் தாக்குதலால் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (40). கால்டாக்ஸி டிரைவர். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் காரை நிறுத்திவிட்டு பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அங்கு ரோந்து பணியில் இருந்த மதுரவாயல் பகுதியை சேர்ந்த ரிஸ்வான் என்ற போலீஸ்காரர் வந்துள்ளார். ராஜ்குமாரிடம் விசாரித்தபோது வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கான்ஸ்டபிள் ரிஸ்வான் ராஜ்குமாரை தாக்கினார். அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

ராஜ்குமாருடன் நின்ற பெண் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு தலைமறைவாகியதாக கூறப்படுகிறது. மதுரவாயல் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் ராஜ்குமாரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜ்குமார் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஆனால், போலீசார் தாக்கியதில் ராஜ்குமார் மர்மமான முறையில் இறந்ததாக உறவினர்கள் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மதுரவாயல் போலீசார் கூறியதாவது: போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்த தகவலின்படி, மதுரவாயல் போலீசார் சென்றனர். ராஜ்குமார் மயங்கி கிடந்தார். ஆனால், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த பெண் தலைமறைவானார். அவர் யார், என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரோந்து பணியில் இருந்த 3 காவலர்களை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கால்டாக்சி டிரைவர் மர்ம மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவான பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web