ஷாக்.. வெடித்து சிதறிய செல்போன்.. பைக்கில் சென்ற போது நேர்ந்த விபரீதம்!

 
புஷ்பராஜ்

கடலூர் அருகே கண்ணாரப்பேட்டை பகுதியில் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து சிதறியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானார்கள். கடலூர் அருகே கண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ். சுப நிகழ்ச்சிக்காக தனது தாய் மற்றும் பாட்டியை இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார்.

மாலை நிகழ்ச்சிக்காக 3 பேரும் லசோதனப்பாளையம் பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது புஷ்பராஜின் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து சிதறியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்,  செல்போனை தூக்கி எறிய முயன்றார். அப்போது  இருசக்கர வாகனத்தில் சென்ற புஷ்பராஜ், தாய், பாட்டி ஆகியோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். செல்போன் வெடித்ததில் புஷ்பராஜூக்கு லேசான காயம் ஏற்பட்டாலும், பைக்கில் இருந்து தவறி விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். செல்போன் வெடித்து விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web