அதிர்ச்சி... காதலியைக் கொன்றுவிட்டு விடிய விடிய சடலத்துடன் அமர்ந்திருந்த காதலன்!

 
புனே

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த இளம்பெண் கோமல் தஹாலே (27), அதே பகுதியில் வேறொரு ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த ஷுபம் கல்பாண்டே எனும் இளைஞருடன் டேட்டிங் செயலி மூலம் அறிமுகமாகி பழகி வந்தார். இவர்களது பழக்கம் நாளடைவில் காதலில் கொண்டு சென்றது. இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாகத் திருமணம் செய்து கொள்ளாமலேயே லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.


இவர்களது பழக்கம் இருவீட்டு பெற்றோர்களுக்கும் தெரிய வந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கப் பெற்றோர் முடிவு செய்திருந்தனர். இதற்கிடையே கடந்த 3 மாதங்களாக கோமல் நடத்தையில் சந்தேகப்பட்டு இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று நண்பர்களுடன் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு, ஹிஞ்சவாடி பகுதியில் கோமல் தங்கியிருந்த விடுதி அறைக்கு நள்ளிரவு 12 மணிக்குத் திரும்பியுள்ளனர்.

அப்போது நள்ளிரவு 3 மணியளவில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த ஷுபம் கோமலைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் மயங்கி உயிருக்குப் போராடிய கோமலுக்கு உடனடியாக உதவி செய்யாமல், விடிய விடிய அவரது உடல் அருகிலேயே அமர்ந்து ஷுபம் அழுது கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

கள்ளக்காதல்

காலை சுமார் 6.30 மணியளவில் அவரே போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட கோமல் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், விசாரணையில் கோமலைக் கொலை செய்ததை ஷுபம் ஒப்புக் கொண்டதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.