அதிர்ச்சி... தொடரும் சோகம்... யானையைத் தொடர்ந்து மயக்க ஊசி செலுத்தப்பட்ட புலியும் உயிரிழப்பு!

 
புலி


கேரள மாநிலத்தில் மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்பட்ட யானை, வனப்பகுதியில் உயிரிழந்த நிலையில், யானையைத் தொடர்ந்து  கேரளம் கண்ணூர் மாவட்டத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட புலியும் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வனத்துறையின் மீதான விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் அவ்வப்போது வனவிலங்குகளின் நடமாட்டம் குடியிருப்புப் பகுதிகளில் அதிகரித்து வருகிறது. குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் வனவிலங்குகளால் உயிரிழப்புகள் ஏற்படுவதோடு, மக்கள் பாதுகாப்பு கருதி மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் வனவிலங்குகளும் உயிரிழக்கும் அபாயம் தொடர்ந்து வருகிறது. 

புலி
கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம், வயநாடு தண்ணீர் கொம்பன் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து, வனப்பகுதிகளில் யானையை விடுவித்தனர். ஆனால், யானை உயிரிழந்தது. நேற்று கண்ணூர் அருகே கம்பி வேலியில் சிக்கிக் கொண்ட புலி ஒன்றை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து, பின்னர், திருச்சூர் உயிரியல் பூங்காவிற்கு புலியைக் கொண்டு சென்றனர்.

புலி
நேற்றிரவு 7 மணியளவில் திருச்சூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டு கூண்டில் புலி அடைக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு 8.45 மணியளவில் புலி உயிரிழந்தது. 
புலியின் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தி உடனடியாக அரிக்கை சமர்ப்பிக்குமாறு கேரள மாநில முதன்மை வனவிலங்கு வார்டனுக்கு அம்மாநில வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web