உஷார்... கல்யாணப் பத்திரிக்கைத் தருவதாக வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள்... கை, கால்களைக் கட்டிப் போட்டு 8 சவரன் நகைகள் கொள்ளை!

 
கீதா

தங்கம் விற்கிற விலையில உஷாரா இருங்க. கல்யாண பத்திரிக்கை வைப்பதாக சொல்லி, வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள், கை, கால்களைக் கட்டிப் போட்டு 8 சவரன் நகைகளுடன் எஸ்கேப்பாகி இருக்கிறார்கள். குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள சுக்வால் பகுதியை சேர்ந்தவர் கீதா (வயது 52). இவரது கணவர் ஓராண்டுக்கு முன் இறந்து விட்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இருவரும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இதனால் கீதா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் 1 மணியளவில் கீதா வீட்டில் இருந்தபோது மர்ம நபர்கள் 2 பேர் வந்தனர். திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்ததாகச் சொன்னார்கள். உடனே கீதா அவர்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்று உபசரிக்க ஆரம்பித்தார்.

அப்போது, 'நீங்கள் யார்? நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?' அவர் கேட்டார். அதற்கு அவர்கள் தெளிவில்லாமல் பதிலளித்தனர். அப்போது திடீரென 2 பேரும் கீதாவை தாக்கி கை, கால்களை கட்டி வாயில் துணியை வைத்து கீழே தள்ளினர். பின்னர் அறையில் இருந்த பீரோவை திறந்து 8 சவரன் நகைகளை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பிச் சென்றனர். கீதா வாயில் துணியை அடைத்ததால் சத்தம் எழுப்ப முடியவில்லை.சிறிது நேரம் கழித்து கீதா வாயில் இருந்த துணியை எடுத்து கத்தினாள். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவரது கை, கால்களில் இருந்த கட்டுகளை அவிழ்த்தனர்.

இதுகுறித்து கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கீதா மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். இது குறித்த புகாரின் பேரில் வீட்டில் நகையை கொள்ளையடித்தது யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டி வைத்து 8 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web