அதிர்ச்சி... கை நிறைய கஞ்சா பொட்டலங்களுடன் 3 இளைஞர்கள் கைது!

 
கஞ்சா கடத்தல்
தமிழகம் முழுவதுமே சமீப காலங்களாக கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது. இந்த மாவட்டம் என்று குறிப்பிட்டு சொல்லமுடியாமல் அனைத்து மாவட்டங்களிலுமே கஞ்சா கடத்தல் சம்பவங்களும், விற்பனை சம்பவங்களும் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் தூத்துக்குடியில் பட்டப்பகலில் தைரியமாக நடுரோட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 3 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. 

கஞ்சா

தூத்துக்குடி மொட்டைகோபுரம் பகுதியில் தாளமுத்து நகர் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர் . அப்போது அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த 3 இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். அதில், மாதவன் நாயர் காலனி சேர்ந்த ஆனந்த் (35), லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த சதீஷ் (19), செயின்ட் மேரீஸ் காலனியைச் சேர்ந்த விமல்ராஜ் (20) ஆகியோர் என்பதும், விற்பனைக்காக கையில் கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்ததும் தெரிய வந்தது. 

கைது

இதனையடுத்து 3 இளைஞர்களையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து சுமார் 300 கிராம் கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!