திமுகவுக்கு அதிர்ச்சி... சீமான் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியில் இணைந்த முக்கிய நிர்வாகி!

 
சீமான் திமுக நிர்வாகி சீமான் திமுக நிர்வாகி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் திமுகவின் முக்கிய முகமாக அறியப்பட்ட நிர்வாகி ஒருவர், அக்கட்சியிலிருந்து விலகி நாம் தமிழர் கட்சியில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

சங்கரன்கோவில் திமுக நகரச் செயலாளராகப் பதவி வகித்து வந்த ரெத்தினகுமார், இன்று (ஏப்ரல் 13, 2026) தனது தாய் கட்சியான திமுகவிலிருந்து விலகினார். சென்னை நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்திற்குச் சென்ற அவர், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில் தன்னை முறைப்படி இணைத்துக் கொண்டார். அவருடன் அவரது ஆதரவாளர்கள் பலரும் நாதகவில் இணைந்தனர்.

சீமான்

கடந்த சில காலமாகவே உள்ளூர் திமுக தலைமைக்கும் இவருக்கும் இடையே அதிருப்தி நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. சங்கரன்கோவில் பகுதியில் செல்வாக்கு மிக்க ஒரு நிர்வாகி ஆளுங்கட்சியிலிருந்து விலகியது அப்பகுதி திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீமான்

சங்கரன்கோவில் நகராட்சிப் பகுதிகளில் பலமான வாக்கு வங்கியை வைத்திருப்பவராகக் கருதப்படும் ரெத்தினகுமாரின் வருகை, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தெற்கு மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சிக்குக் கூடுதல் பலத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீமான் அவருக்குக் கட்சியில் முக்கியப் பொறுப்பு வழங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.