திமுகவுக்கும் பெரும் அதிர்ச்சி... ஜெகத்ரட்சகன் மகன் சுந்தீப் ஆனந்த் தவெக-வில் இணைந்தார்.. முழு லிஸ்ட் இதோ!

 
ஜெகத்ரட்சகன் மகன் சுந்தீப் ஆனந்த்

அதிமுகவின் முக்கிய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் கூட்டாகத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுத்து வரும் வேளையில், தற்போது ஆளுங்கட்சியான திமுகவின் கோட்டையையும் தவெக அதிரடியாகச் சரித்துள்ளது. திமுகவின் மிக முக்கிய மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகனின் மகன் சுந்தீப் ஆனந்த் இன்று தவெக-வில் இணைந்துள்ளது அறிவாலய வட்டாரத்தை நிலைகுலையச் செய்துள்ளது.

சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று மதியம் முதல் 'மாற்றுக் கட்சியினர் இணையும் மெகா விழா' மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

க்ட்

அதிமுகவினர் ஒருபுறம் அலை அலையாகத் திரண்டு வரும் வேளையில், இன்று மாலை 6.28 மணியளவில் யாரும் எதிர்பாராத திருப்பமாக, திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் மகன் சுந்தீப் ஆனந்த் பனையூர் அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவரைத் தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் சால்வை அணிவித்து முறைப்படி கட்சியில் வரவேற்றார்.

மறைமுகக் குதிரை பேரம், ஆட்சிக் கவிழ்ப்பு சதி வழக்கு எனத் திமுக - தவெக இடையே அரசியல் யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திமுக எம்பியின் மகன் தவெக-வில் இணைந்துள்ளது திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெகத்ரட்சகன்

இன்று தவெக-வில் இணைந்த முக்கியப் புள்ளிகளின் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், பனையூர் தலைமை அலுவலகத்தில் இன்று முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தங்களை அதிகாரப்பூர்வமாகத் தவெக-வில் இணைத்துக் கொண்ட முக்கியத் தலைவர்களின் லிஸ்ட் திமுக, அதிமுகவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வரிசை எண்

முக்கியப் புள்ளிகள் / தலைவர்கள்

முந்தைய கட்சி / துறை

1

சி. விஜயபாஸ்கர்

அதிமுக முன்னாள் அமைச்சர்

2

வைகைச்செல்வன்

அதிமுக முன்னாள் அமைச்சர்

3

வி. புகழேந்தி

அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர்

4

பொன் ஜெய்சீலன்

கூடலூர் முன்னாள் எம்.எல்.ஏ (அதிமுக)

5

சுந்தீப் ஆனந்த்

திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் மகன்

6

கலைராஜன்

திமுக முன்னாள் எம்.எல்.ஏ

7

கந்தன்

அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளர்

8

ஜே.எம்.பஷீர்

பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர்

9

ரவி மரியா

பிரபல திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர்

அடுத்த இலக்கு ‘திருச்சி சிவா’ குடும்பமா? பரபரக்கும் அரசியல் களம்

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மகன் சுந்தீப் ஆனந்த் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ கலைராஜன் ஆகியோரின் இந்த தாவலைத் தொடர்ந்து, திமுகவின் மற்றொரு மிக முக்கிய நாடாளுமன்ற முகமான திருச்சி சிவாவின் குடும்பத்திலும் தவெக கை வைத்துள்ளதாகத் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகள் காயத்ரி, தற்போது தவெக நிர்வாகிகளுடன் முதற்கட்டப் பேச்சுவார்த்தைகளை முடித்துள்ளதாகவும், அவரும் மிக விரைவில் பனையூர் அலுவலகத்திற்கு வந்து முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தவெக-வில் இணையவிருப்பதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.