அதிர்ச்சி.. டன் கணக்கில் செத்து கிடக்கும் மீன்கள்.. சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்!

 
வோலோஸ் துறைமுகம்

வோலோஸ் துறைமுக நகரம் கிரேக்கத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள கரைகள் மற்றும் நீரிலிருந்து இறந்த மீன்கள் கொத்துக் கொத்தாக செத்து மிதக்கின்றன. இது நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு சுமார் ஒரு மாதமாகியும் நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் செல்கிறது.


நூறு டன்னுக்கும் அதிகமான மீன்கள் செத்து மிதக்கின்றன. இந்த சம்பவத்திற்கு பருவநிலை மாற்றமே காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அதிகப்படியான மீன்கள் செத்து அழுகி மிதப்பதால், பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு மற்றும் நோய் அபாயம் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இறந்த இந்த மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் உள்ளாட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web