அதிர்ச்சி... டிவி வெடித்து தீ விபத்து... பொருள்கள் எரிந்து சேதம்!

 
வெடித்த டிவி
தூத்துக்குடி மாவட்டம் போல்பேட்டை பகுதியில் ஒரு வீட்டில் தொலைக்காட்சி பெட்டி வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்தன.

தூத்துக்குடி போல்பேட்டை கிழக்கு பகுதியில் தருமர் என்பவருக்கு சொந்தமான காம்பவுண்டில் செண்பகவல்லி என்பவர் பொறியியல் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் தனது மகள் சொர்ண மீனாவுடன் வசித்து வருகிறார். நேற்று மாலை செண்பகவல்லி கூலி வேலைக்கு சென்றுள்ள நிலையில் வீட்டில் தனியாக இருந்த சொர்ண மீனா தனது வீட்டில் இருந்த டிவியை ஆன் பண்ணி உள்ளார். 

தூத்துக்குடி

அப்போது மின் கசிவு காரணமாக டிவி பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்து உள்ளது இதைத் தொடர்ந்து மீனா  சொர்ணம் அலறியடித்தபடியே வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார்.  டிவி வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டிலிருந்த வீட்டு உபயோக பொருட்கள், பீரோ, லேப்டாப், செல்போன் மற்றும் சான்றிதழ்கள், ரேஷன் கார்டு ,ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. 

ஸ்மார்ட் டிவி

தீ விபத்தை தொடர்ந்து தகவல் அறிந்த வந்த தூத்துக்குடி நகர தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் முருகையா தலைமையிலான தீயணைப்பு துறையினர் தீ மேலும் அருகே உள்ள வீடுகளுக்கு பரவாமல் அணைத்தனர். இந்த தீ விபத்து தொடர்பாக வடபாகம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web