அதிர்ச்சி... ஓடும் ரயிலில் இருந்து விழுந்த இளைஞர்கள்... பரிதாபமாக பலியான சோகம்!
ஓடும் ரயிலில் இருந்து இறங்குவதற்காக முயற்சித்த இரு இளைஞர்கள் கீழே விழுந்து இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை திருவொற்றியூர்-விம்கோ ரயில் நிலையம் இடையே தண்டவாளத்தில் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் கிடப்பதாக அப்பகுதி மக்கள் ரயில்வே போலீஸாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். தண்டவாளம் அருகே பலத்த காயங்களுடன் இறந்து கிடந்த சுமார் 30-32 வயதுடைய அடையாளம் தெரியாத இரு இளைஞர்களின் உடல்கள் மீட்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பின்னர் இந்த சம்பவம் குறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த வாலிபர்கள் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும், நேற்று மதியம் ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்த போது கீழே விழுந்து உயிரிழந்து உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, இறந்த இருவரையும் அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு, ரயில் படிக்கட்டில் அமர்ந்திருந்த போது மின்கம்பத்தில் அடிபட்டு கீழே விழுந்தார்களா அல்லது யாரேனும் தள்ளினார்களா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!