அதிர்ச்சி.. கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத ஆண் சடலம்.. தீவிர விசாரணையில் போலீசார்!

 
 இனிகோ நகர் கடற்கரை

தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியிருப்பதை அப்பகுதி விசைப்படகு மீனவர்கள் கண்ட னர். பின்னர் உடனடியாக தென்பாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.

பின், அழுகிய நிலையில் கரையில் கிடந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார், எந்த பகுதியில் இருந்து இறந்தவர் எப்படி இறந்தார்? குறித்த நபர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அதேபோன்று சமீப நாட்களாக கடலோர பகுதிகளில் இருந்து பீடி இலைகள், கஞ்சா, மாத்திரைகள் போன்ற பொருட்கள் கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்படுகின்றன. தூத்துக்குடி கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கரை ஒதுங்கிய சம்பவம் அப்பகுதி மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web