ஷாக் வீடியோ.. ரயில் உணவை ருசித்து பார்த்த எலி..!

 
ரயில் உணவை சாப்பிடும் எலி
ரயில் பயணிகளுக்கு உணவு தயாரிக்கும் பெட்டியில் தயாரித்து வைக்கப்பட்டிருந்த உணவுகளை எலிகள் உண்ணும் காட்சி வெளியாகியுள்ளது.

 கோவாவின் மட்கான் பகுதியிலிருந்து மும்பை செல்லும் விரைவு ரயிலின் உணவு தயாரிக்கும் பெட்டியில் (பேன்ட்ரி) சமையலறையில் எலிகள் ஓடுவதும், பாத்திரத்திலுள்ள உணவுகளை உண்பதும்போன்ற விடியோ வெளியாகியுள்ளது.


சமையலறைப் பெட்டியில் வெளியே இருந்தவாறு அந்த விடியோ எடுக்கப்பட்டுள்ளது. அதில் எலிகள் உணவுகளை உண்டுவிட்டு, ஓடுவது போன்று பதிவாகியுள்ளது. வெட்டி வைத்த காய்கறிகள் குவித்துவைக்கப்பட்டிருக்கும் மேசையிலும் எலிகள் ஓடுகின்றன. இந்த விடியோவால், ரயில்வே உணவு தயாரிப்பின் சுகாதாரமின்மை குறித்து சமூக வலைதளத்தில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Video Of Rats Eating Passengers' Food In Train's Pantry Car Goes Viral;  Railways Under Fire Over Another Hygiene Incident

ரயில்வேத் துறை சார்பில் நெடுந்தூரம் பயணம் செய்யும் விரைவு ரயில்களில் தனியார் நிறுவன ஒப்பந்ததாரர்கள் மூலம் உணவுகள் தயாரித்து வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web