ஷாக்.. Village Cooking சேனல் தாத்தா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி!
தமிழில் யூடியூப்பில் பல சமையல் சேனல்கள் இருந்தாலும், Village Cooking சேனலின் ரசிகர் பட்டாளமே தனி. தமிழில் சுமார் 24 மில்லியன் அதாவது 2.4 கோடி பின்தொடர்பவர்களை கொண்ட சேனல் இது. கடந்த 2019 தேர்தலின் போது காங்கிரஸின் ராகுல் காந்தி கூட இந்த Village Cooking சேனல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். தமிழகம் மற்றும் உலகம் முழுவதையும் விட அதிகமான பின்தொடர்பவர்களை கொண்ட சேனல் இது.
தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி! Grandpa is admitted to the Hospital due to Heart Disease. He is in good condition now. Thank you for your love and Support! pic.twitter.com/zCotVgS5w8
— Subramanian Velusamy (@vstamilan) March 28, 2024
இந்த சேனல் முக்கியமான நபர் என்றால் அதில் வரும் தாத்தா. வயதான காலத்திலும் வேட்டியை மடித்து சமைப்பது அனைவரையும் பிரமிக்க வைப்பார். இவரின் வேகம் இளமையின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும்.இதனிடையே திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து Village Cooking சேனல் அட்மின் சுப்பிரமணியன் வேலுச்சாமி சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தாத்தா இதய நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நலமாக உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி! என்று பதிவிட்டுள்ளார். Village Cooking சேனலை சகோதரர்களான சுப்பிரமணியன், அய்யனார், முருகேசன், தமிழ்ச்செல்வன், முத்து மாணிக்கம் ஆகியோருடன் தாத்தா பெரிய தம்பி நடத்தி வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சின்ன வீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இதில் ஒளிப்பதிவாளராகவும், அட்மினாகவும் சுப்ரமணியன் பணியாற்றுகிறார். தற்போது தனது தாத்தாவின் உடல்நிலை குறித்த தகவலையும் பகிர்ந்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!