அதிர்ச்சி.. பெண்ணின் ஆடைகளை கழற்றி நிர்வாண ஊர்வலம்.. 4 பெண்கள் அதிரடியாக கைது!

 
இந்தூர்

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் மாவட்டத்தில் உள்ள கவுதம்புராவில் உள்ள சச்சோடா கிராமத்தில் 30 வயதுப் பெண் ஒருவர் ஹோலி பண்டிகையை முன்னிட்டு வீட்டை விட்டு வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டு, நான்கு பெண்களால் அடித்து உதைக்கப்பட்டார். மேலும், பெண்ணின் ஆடைகளை கழற்றி, நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் இன்று சச்சோடா கிராமத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுனில் மேத்தா சென்றார். ஆனால், தனக்கு நேர்ந்த அவமானத்தால் பாதிக்கப்பட்ட பெண் தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டதாகத் தெரிய வந்தது. இதுகுறித்து சுனில் மேத்தா விசாரணை நடத்தினார்.

நான்கு பெண்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது வீட்டிலிருந்து வெளியே இழுத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். பெண் கெஞ்ச, அவர்கள் அவளை அடித்து உதைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

கற்பழிப்பு பலாத்காரம் செக்ஸ் பாலியல் பெண்

இதுகுறித்து கௌதம்புரா போலீஸார் வழக்குப் பதிவு செய்து, இளம்பெண்ணை நிர்வாணமாக்கி, உதைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்ற 4 பெண்களை இன்று கைது செய்தனர். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவுகள் 323 (வேண்டுமென்றே காயப்படுத்துதல்), 354-ஏ (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் 452 (தவறான கட்டுப்பாடு மற்றும் தாக்குதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தூரில் இளம்பெண்ணை நிர்வாணம் செய்து ஊர்வலமாக இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web