அதிர்ச்சி... நடுரோட்டில் வீலிங் செய்து எமனுக்கு காலிங் பெல் அடித்த இளைஞர்!

 
வீலிங்

தமிழகத்தில் டூ வீலர்களில் வீலிங் செய்து, நடுரோட்டில் சாகசம் செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. கைகளை உடைத்துக் கொண்டு, நீதிமன்ற படியேறி, லைசென்ஸ் ரத்து செய்யுமளவிற்கு போயிருக்கிறது யூடியூபர் டிடிஎஃப் வாசன் செய்த சேட்டைகள்.

அதே போன்று திருச்சி, பெங்களூரு பகுதிகளில் தீபாவளியன்று பட்டாசுகளை இருசக்கர வாகனத்தில் வைத்து வீலிங் செய்து, வெடித்து அட்ரா சிட்டி செய்த இளைஞர்களைப் போலீசார் கைது செய்தனர். 

டிடிஎப் வாசன்

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் இளைஞர் ஒருவர் வீலிங் சாகசம் நிகழ்த்தி வருகிறார். மேலும், அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கமான duke_gokul என்கிற ஐடி-ல் பதிவேற்றிருக்கிறார்.

இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலா பரவி வருகிறது. அதுமட்டுமில்லாமல் இவர் விதவிதமாக கலர், கலராக சட்டை அணிந்துகொண்டு இருசக்கர வாகனத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆபத்தான முறையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் வீலிங் செய்கிறார்.

காரின் மேற்கூரையில் வெடித்த பட்டாசு

இரண்டு கைகளையும் விட்டு வண்டி ஓட்டுவது என சாகச காட்சிகளை மட்டுமே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதனால், அச்சமடைந்துள்ள மக்கள் செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web