அதிர்ச்சி.. நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் துண்டான இளைஞரின் கைகள்!

 
திருவனந்தபுரம்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் மண்ணந்தலை பகுதியில் ரகசிய இடத்தில் வைத்து நாட்டு வெடி பொருட்களை சிலர் தயாரித்து வந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக வெடிகுண்டுகள் வெடித்தன. இந்த விபத்தில் நெடுமாங்காட்டைச் சேர்ந்த 17 வயது சிறுவனின் இரண்டு கைகளும் துண்டானது.
மேலும், அவருடன் இருந்த அகிலேஷ் (வயது 18) பலத்த காயம் அடைந்தார், கிரண், சரத் ஆகிய 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

கிரணும் சரத்தும் காயங்களுடன் அங்கிருந்து தப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து கை துண்டிக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வாலிபரையும், அகிலேஷையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தப்பி ஓடிய கிரண், சரத் ஆகிய இருவரையும் பிடித்து கைது செய்தனர்.

வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்ட 4 பேரின் பெயர்கள் ரவுடி பட்டியலில் இருப்பதாகவும், அவர்கள் மீது வஞ்சியூர் காவல் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர். வன்முறையில் ஈடுபட்டு நாடாளுமன்ற தேர்தலை சீர்குலைக்க நாட்டு வெடிகுண்டு தயார் செய்யப்பட்டதா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள் 

From around the web