பேரதிர்ச்சி.. குரங்கை விழுங்க பார்த்த 12 அடி நீள மலைப்பாம்பு..!!

 
12 அடி மலைபாம்பு
  குரங்கை விழுங்க முயன்ற 12 அடி நீள மலைப்பாம்பு  பிடித்து வனப்பகுதியில் விடப்பட்டது.
 

திருச்சி மணப்பாறை அடுத்த மருங்காபுரி சமத்துவபுரம் குடியிருப்பு பகுதியில் நேற்று 12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு, குரங்கை ஒன்றை விழுங்க சுற்றி வளைத்து இறுக்கிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட மற்ற குரங்குகள் சப்தமிட்டன.


இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் சென்ற வனத்துறை நிலை அலுவலர் மனோகர் மற்றும் சிறப்பு நிலைய அலுவலர் நாகேந்திரன் ஆகியோர் தலைமையிலான துவரங்குறிச்சி தீயணைப்புத் துறை வீரர்கள், சிறிது நேர போராட்டத்துக்குப் பிறகு மலைப்பாம்பைப் பிடித்தனர். குரங்கு சடலமாக மீட்கப்பட்டது. பிடிபட்ட மலைப்பாம்பு மற்றும் குரங்கின் சடலம் துவரங்குறிச்சி வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. பாம்பு அருகிலிருந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடப்பட்டது.

குரங்கை விழுங்க முயன்ற மலைப்பாம்பு பிடிபட்டது- Dinamani

அதேபோல், துவரங்குறிச்சி திடீர் நகர் குடியிருப்பு பகுதியில் புகுந்த 10 அடி நீள கருஞ்சாரை பாம்பையும் துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.