பேரதிர்ச்சி.. திடீரென வெடித்த பயங்கர குண்டு.. 5பேர் பலியான சோகம்..!!
Nov 3, 2023, 16:20 IST

பாகிஸ்தானில் திடீரென வெடித்த குண்டு வெடிப்பால் பெரும் விபத்து நிகழ்ந்துள்ளது.
பாகிஸ்தானில் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் போண்டா பஜார் பகுதியில் டேங் அட்டா என்ற இடத்தில் திடீரென்று இன்று குண்டுவெடிப்பு நடந்தது. இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.
இதனை தொடர்ந்து, அருகேயுள்ள மருத்துவமனைகளில் அவசரகால நடவடிக்கைகளுக்கு தேவையான விசயங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுபற்றிய விசாரணையில், மோட்டார் பைக் ஒன்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அந்த பகுதியில், துப்பாக்கி சூடு சத்தமும் கேட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக, வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு மற்றும் போலீசார் உடனடியாக அந்த பகுதிக்கு சென்றனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
From around the
web