அதிர்ச்சி... நிர்வாணமாக வீடியோ எடுத்து ஒரு வருடமாக 2 மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை... பள்ளி தோழனே வெறித்தனம் - 5 பேர் கைது!

 
பாலியல் வன்கொடுமை

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் விழிஞ்சம் பகுதியில் இரண்டு பள்ளி மாணவிகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய வழக்கில், 3 சிறுவர்கள் உட்பட 5 பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் டினு (20) மற்றும் லின்சன் (21) ஆகிய இரு வயது வந்தவர்களும், மூன்று பள்ளி மாணவர்களும் அடங்குவர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆட்டோவில் சுற்றித் திரிந்து, மாணவிகளிடம் காதல் நாடகமாடி அவர்களை மயக்கித் தனித்தனியே வெவ்வேறு வீடுகளுக்கு அழைத்துச் சென்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

பின்னர், மாணவிகளின் நிர்வாணப் புகைப்படங்கள் தங்களிடம் இருப்பதாகக் கூறி அவர்களை மிரட்டி மீண்டும் வன்கொடுமைக்கு உட்படுத்த முயன்றுள்ளனர். குறிப்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் விலகிச் செல்ல முயன்றபோது, குற்றவாளிகளில் ஒருவரான பள்ளி மாணவன் டிசி பெற்று, அதே பள்ளியில் சேர்ந்து மாணவிகளைத் தொடர்ந்து வழியிலும் பள்ளியிலும் வைத்துத் துன்புறுத்தியுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

ஆபாச வீடியோ செல்போன்

மாணவிகளின் துணிச்சலான புகாரின் அடிப்படையில், விழிஞ்சம் காவல் நிலைய ஆய்வாளர் கே. ஹேமந்த் குமார் தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி ஐந்து பேரையும் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து செல்போன்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கில் பயன்படுத்தப்பட்ட ஆட்டோஷாவைத் தேடும் பணியும், வேறு யாருக்கேனும் இதில் தொடர்புள்ளதா என்பது குறித்த தீவிர விசாரணையும் நடைபெற்று வருகிறது.