அதிர்ச்சி... தெரு நாய் கடித்ததில் 4 மாத குழந்தை பலி!

 
தெருநாய் நாய் தெருநாய் நாய்

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம், டபல்கண்டி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர், தங்களின் 4 மாத பச்சிளம் குழந்தையுடன் வசித்து வந்தனர். நேற்று அதிகாலை குழந்தை தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தபோது, பெற்றோர் வீட்டின் கதவைத் திறந்து வைத்துவிட்டு வெளியே சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது வீட்டிற்குள் நுழைந்த தெரு நாய் ஒன்று, தொட்டிலில் இருந்த குழந்தையைக் கொடூரமாகக் கடித்துக் குதறியது.

நாய்

குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர், குழந்தை ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாகக் குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தத் துயரச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தெருநாய்

இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், குழந்தையின் மரணம் நாய்க்கடியால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர். தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.