அதிர்ச்சி... பெண்களின் உள்ளாடைகளைத் திருடி அதன் மீது படுத்துத் தூங்கிய வாலிபர்!

 
உள்ளாடைத் திருடி

புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியில் பெண்களின் உள்ளாடைகளைத் திருடி, அவற்றின் மீது படுத்து உல்லாசமாக உறங்கும் வினோதப் பழக்கம் கொண்ட டெய்லர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி முதலியார்பேட்டை சிங்கிலி நாயக்கர் தெருவில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றின் அறையில், அப்பகுதி வீடுகளில் காயப்போடப்பட்டிருந்த பெண்களின் உள்ளாடைகள் (ப்ரா, பாவாடை, ஜட்டி) சிதறிக்கிடந்தன மற்றும் சுவர்களில் தொங்கவிடப்பட்டிருந்தன. இது குறித்து அப்பகுதிப் பெண் ஒருவர் முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

உள்ளாடை

விசாரணையில், உடையார்தோட்டத்தைச் சேர்ந்த டெய்லர் வேணு (44) என்பவர் தான் இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 7 ஆண்டுகளாக மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வரும் வேணு, எப்போதும் தீவிர மதுபோதையில் இருக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளார். அப்பகுதி வீடுகளில் திருடப்படும் பெண்களின் உள்ளாடைகளைத் தன் வசப்படுத்தி, மது மயக்கத்தில் அவற்றின் மீது மெத்தை போலப் படுத்து உறங்கும் மனநலப் பாதிப்பு போன்ற வினோதப் பழக்கத்தைக் கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.