அதிர்ச்சி.. ஓராண்டுக்கு பிறகு கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழப்பு.. அச்சத்தில் மக்கள் !!

 
கொரோனா

உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்று பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். கொரோனா கட்டுப்பாடு, தனிமனித இடைவெளி, முகக்கவசம் என அனைத்தையும் மக்கள் மறந்துவிட்டனர். இந்த நிலையில் தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தினசரி தொற்று பாதிப்பு 50க்கும் குறைவாகவே உள்ளது. உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை. குறிப்பாக திருச்சியில் கொரோனா பாதிப்புக்கு கடந்த ஒரு ஆண்டாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

கொரோனா

இந்நிலையில், திருச்சி சிந்தாமணி பகுதி பூசாரி தெருவைச் சேர்ந்த உதயகுமார் (27) என்பவர் காய்ச்சல், வயிற்றுப்போக்கு காரணமாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டிருந்தார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஆனால், தொற்று உறுதி செய்யப்பட்ட பரிசோதனை அறிக்கை வருவதற்கு முன்பே, அவரது உடல் உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கியதால், அவர் நேற்று காலை உயிரிழந்தார். இதனால் இளைஞரின் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் மூழ்கினர். கொரோனா பாதிப்பால் இளைஞர் உயிரிந்தது அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். 

மீண்டும் கொரோனா பரவுகிறதா என மக்கள் அச்சமடைந்தனர். இந்த நிலையில், இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ஆர்.வைத்திநாதன் கூறுகையில், பெங்களூருவில் பணியாற்றி வந்த உதயகுமார், அண்மையில் நண்பர்கள் 3 பேருடன் கோவா சென்றுவிட்டு திரும்பியுள்ளார். 

கொரோனா

இதனால், உதயகுமார் உள்ளிட்ட 4 பேரின் குடும்பத்தினரும் கண்டறியப்பட்டு அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், உயிரிழந்த உதயகுமாரின் உடல், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி தகனம் செய்யப்பட்டது என்றார். 

From around the web