அதிர்ச்சி... ஆட்டோவிலிருந்து தூக்கி வீசப்பட்ட பச்சிளங்குழந்தை!

 
கர்ப்பிணி குழந்தை  மாணவி இளம்பெண் கள்ளக்காதல்

தெலுங்கானா மாநிலம் மகபூப்நகர் நியூ டவுன் பகுதியில் நள்ளிரவில் அரங்கேறிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவு நேரத்தில் அப்பகுதியில் சென்ற ஆட்டோ ஒன்றிலிருந்து சால்வை மற்றும் மெத்தையில் சுற்றப்பட்ட பார்சல் போன்ற பொருள் ஒன்று சாலையில் தூக்கி வீசப்பட்டுள்ளது. பார்சலை தூக்கி வீசியதும், உடனே அந்த ஆட்டோ அங்கிருந்து அவசரமாக வேகமாகச் சென்று விட்டது. அதைக் கடந்து சென்ற வாலிபர்கள் சாலையோரம் குழந்தையின் அழுகுரலைக் கேட்டு அருகில் சென்று பார்த்தபோது, அங்கே பச்சிளம் குழந்தை ஒன்று வீசப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

உடனடியாக அவர்கள் காவல்துறைக்கு இது குறித்து தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகத் தெரிவித்தனர்.

குழந்தை வாயில் டேப்

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு குழந்தையை வீசிச் சென்றவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தையைத் தாங்கள் தத்து எடுத்து வளர்த்துக் கொள்வதாகக் கூறி பலரும் மருத்துவமனைக்கு வந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தையை வழங்கும் அதிகாரம் மருத்துவமனைக்கு இல்லை என்பதால், மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தை அணுகுமாறு மருத்துவர்கள் அவர்களுக்கு அறிவுறுத்தினர்.