அதிர்ச்சி... தேர்தல் பணியில் இருந்த டிஎஸ்பி மாரடைப்பால் உயிரிழப்பு!

 
டிஎஸ்பி உயிரிழப்பு டிஎஸ்பி உயிரிழப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தல் பணிக்காகத் திண்டுக்கல் வந்திருந்த காவல்துறை அதிகாரி ஒருவர், மாரடைப்பு காரணமாகப் பணியின் போதே உயிரிழந்த சம்பவம் காவல்துறையினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுவிலக்குப் பிரிவு டிஎஸ்பி-யாகப் பணியாற்றி வந்த ராமகிருஷ்ணன் (58), தேர்தல் பாதுகாப்புப் பணிக்காகத் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு அனுப்பப்பட்டிருந்தார். நேற்று (ஏப்ரல் 23) வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

வாக்காளர்கள்

அங்கிருந்த சக காவலர்கள் மற்றும் அதிகாரிகள் அவரை மீட்டு உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

வாக்குப்பதிவு வாக்காளர்கள்

நேற்று தமிழகம் முழுவதும் 85% வரை வாக்குப்பதிவு நடைபெற்று, பல இடங்களில் விறுவிறுப்பான சூழல் நிலவிய நிலையில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த உயர் அதிகாரி ஒருவரின் இந்தத் திடீர் மறைவு அத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்த டிஎஸ்பி ராமகிருஷ்ணனின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.