அதிர்ச்சி... விஜய்க்கு ஓட்டுக் கேட்டு சென்ற பெண்களை விரட்டியடித்த முதியவர்!

 
முதியவர் பிரச்சாரம் ஓட்டு தவெக முதியவர் பிரச்சாரம் ஓட்டு தவெக

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் (தவெக) மேற்கொண்ட தேர்தல் பரப்புரையின்போது ஒரு பரபரப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேற்று திருச்சி கே.கே.நகர் பகுதியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று தங்கள் கட்சியின் தலைவர் விஜய்க்கு ஆதரவு திரட்டினர். அப்போது, அங்கிருந்த ஒரு முதியவர் தனது வீட்டிற்குள் பரப்புரை செய்ய வரவேண்டாம் எனத் தவெகவினரை தடுத்துள்ளார்.

முதியவர் பிரச்சாரம் ஓட்டு தவெக

வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த முதியவர் தவெகவினரை அநாகரிகமாகப் பேசியதோடு, விறகுக் கம்பை எடுத்து அவர்களைத் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அவரது குடும்பத்தினரும் தவெகவினர் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று கண்டிப்புடன் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரடியாகப் போட்டியிடுவதால், இந்தத் தொகுதி தற்போது மாநிலத்தின் மிக முக்கியமான விஐபி தொகுதியாக மாறியுள்ளது. தனது தலைவர் போட்டியிடும் தொகுதியிலேயே நிர்வாகிகளுக்கு இத்தகைய எதிர்ப்பு கிளம்பியுள்ளது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதியவர் பிரச்சாரம் ஓட்டு தவெக

திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தவெக என நான்கு முனைப் போட்டி நிலவும் நிலையில், வாக்காளர்களைக் கவர அனைத்துக் கட்சிகளும் தீவிரமாகப் போராடி வருகின்றன. சில இடங்களில் இத்தகைய தனிப்பட்ட எதிர்ப்புகள் கிளம்புவது தேர்தல் காலங்களில் இயல்பான ஒன்றாகப் பார்க்கப்பட்டாலும், நட்சத்திர வேட்பாளர் போட்டியிடும் தொகுதியில் இது விவாதப் பொருளாகியுள்ளது.