அதிர்ச்சி... 100 நாள் வேலைத் திட்ட நிதியைக் குறைக்கிறது மத்திய அரசு!

 
இனி இவர்களுக்கு 100 நாள் வேலை இல்லை – புதிய கட்டுப்பாடுகள் இனி இவர்களுக்கு 100 நாள் வேலை இல்லை – புதிய கட்டுப்பாடுகள்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் '100 நாள் வேலைத் திட்டத்திற்காக' தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டு வரும் நிதியைப் பெருமளவு குறைக்க மத்திய அரசு (ஒன்றிய அரசு) தற்போது திட்டமிட்டுள்ளது. இது தமிழகத்தின் கிராமப்புறப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

100 நாள் வேலை

மத்திய அரசு திட்டமிட்டுள்ள புதிய நிதிப் பகிர்வு அளவுகோல்களின்படி, தென் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு பெருமளவு சரிவைச் சந்திக்கவுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த தேசிய நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டின் பங்கு 10% ஆக இருந்தது. ஆனால், மத்திய அரசு எடுக்கவுள்ள புதிய முடிவின்படி இந்த நிதிப் பங்கு 4.1% ஆகக் குறைக்கப்படவுள்ளது.

தமிழகத்தைப் போலவே அண்டை மாநிலங்களான கேரளாவுக்கான நிதிப் பங்கு 2.38% ஆகவும், தெலங்கானாவுக்கான நிதிப் பங்கு 2.17% ஆகவும் குறைய வாய்ப்புள்ளதாகத் தற்போதைய புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசின் இந்த அதிரடி நிதிக்குறைப்பு நடவடிக்கை, கிராமப்புற உழைக்கும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

100 நாள் வேலைத்திட்டம் ஊரக

தமிழகத்தில் விவசாயம் இல்லாத காலங்களில் கிராமப்புறப் பெண்களுக்கு இந்த 100 நாள் வேலைத் திட்டமே முதன்மையான வருவாய் ஆதாரமாக இருந்து வருகிறது. நிதிப் பங்கு பாதியாகக் குறைக்கப்படும் பட்சத்தில், தொழிலாளர்களுக்கான வேலை நாட்களின் எண்ணிக்கை அல்லது தினசரி கூலி வழங்குவதில் தேக்கநிலை போன்ற கடுமையான சிக்கல்கள் உருவாகும் எனச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.