அதிர்ச்சி... திருமணத்திற்குச் சென்ற மணமகன், ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

 
அதிர்ச்சி... திருமணத்திற்குச் சென்ற மணமகன், ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

உத்திரபிரதேச மாநிலம், அமேதி மாவட்டத்தில் திருமணத்திற்குச் சென்று கொண்டிருந்த மணமகன் ரவி யாதவ், திடீரென சரக்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 


திருமண ஊர்வலத்திற்காக அசாம்கருக்குச் சென்று கொண்டிருந்த 30 வயதுடைய ரவி யாதவ், பானி ரயில் நிலையம் அருகே திடீரென காரில் இருந்து இறங்கி தனது ஷெர்வானியைக் கழற்றினார். நேற்று மாலையில் தண்டவாளத்தில் குதிப்பதற்கு முன்பு அவர் ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட்டை அணிந்து கொண்டார். இது குறித்த காரணங்கள் தெளிவாகத் தெரியவில்லை. 

பள்ளி ஆசிரியரின் செக்ஸ் தொல்லை காரணமா?! கரூர் மாணவி தற்கொலை குறித்து தாய் பேட்டி!

போலீசார் ரவி யாதவ் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.