அதிர்ச்சி... மனைவிக்குப் போதைப்பொருள் கொடுத்துப் பல ஆண்களுடன் உறவுகொள்ள வைத்த கணவன் - வன்கொடுமையால் இளம்பெண் பலி!
Sep 15, 2026, 18:40 IST
ஆஸ்திரியாவில் ராபர்ட் ஐச்சிங்கர் என்ற நபர் தனது மனைவிக்குத் தொடர்ந்து போதைப்பொருள் கொடுத்து மயக்கமடையச் செய்து, பணத்துக்காகப் பல ஆண்களை அவருடன் பாலியல் உறவு கொள்ள அனுமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான ராபர்ட் ஐச்சிங்கர் தனது மனைவிக்குத் தொடர்ந்து போதைப்பொருள் அளித்து அவளது நினைவிழக்கச் செய்துள்ளார். பின்னர் பணத்துக்காகப் பல ஆண்களுடன் அவரைப் பாலியல் உறவு கொள்ளச் செய்து வந்துள்ளார்.

இந்தக் கடுமையான பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட அப்பெண்ணின் உடலில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்த பெண் அனுப்பிய குறுஞ்செய்திகளை முக்கிய ஆதாரமாகக் கொண்டுள்ள காவல்துறையினர், இக்கொடூரச் செயலில் தொடர்புடைய மற்ற நபர்களைக் கண்டறியும் பணியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
