அதிர்ச்சி... மனைவி தூக்கில் தொங்குவதை சிரித்தப்படி வீடியோ எடுத்த கணவன்... போதையில் கொடூரம்!

 
கொலை மனைவி கொலை மனைவி

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில், தனது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதைத் தடுத்துக் காப்பாற்றாமல், அதனைத் தனது செல்போனில் வீடியோ எடுத்த கணவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த மனிதாபிமானமற்ற செயல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடப்பா மாவட்டம், ராஜம்பேட்டை அருகே உள்ள போயனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ். இவர் ரயில்வேயில் லோகோ பைலட்டாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் இவரது மனைவி கிருஷ்ணவேணிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

பள்ளி மானவி தற்கொலை

கடந்த வெள்ளிக்கிழமை அன்று இருவருக்கும் இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த கிருஷ்ணவேணி, "நான் செத்துப் போகப் போகிறேன்" என்று மிரட்டிவிட்டு, அறையில் இருந்த மின்விசிறியில் சேலையால் தூக்குப் போட முயன்றுள்ளார்.

சாதாரணமாக எவரும் அந்தத் தற்கொலை முயற்சியைத் தடுத்துக் காப்பாற்ற முயல்வார்கள். ஆனால், ஸ்ரீநிவாஸோ தனது செல்போனை எடுத்து, கிருஷ்ணவேணி தூக்கிட்டுத் துடிதுடித்து உயிரிழப்பதைக் கடைசி வரை வீடியோ எடுத்துள்ளார்.

நடந்த சம்பவம் அறிந்து அங்கு விரைந்து சென்ற கிருஷ்ணவேணியின் உறவினர்கள், அவர் இறந்து கிடப்பதைக் கண்டு கதறினர். அப்போது ஸ்ரீநிவாஸின் செல்போனைச் சோதித்தபோது, அவர் தற்கொலையைத் தடுக்காமல் வீடியோ எடுத்திருப்பது தெரிய வந்தது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் ஸ்ரீநிவாஸை சரமாரியாகத் தாக்கி, மன்னூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தற்கொலை

இந்தச் சம்பவம் குறித்து மன்னூர் சி.ஐ. லிங்கப்பா செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஸ்ரீநிவாஸ் தனது மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டியதோடு, ஒரு உயிரைக் காப்பாற்ற முயற்சி செய்யாமல் வீடியோ எடுத்துள்ளார். அவர் மீது தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் சந்தேக மரணம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

மனைவி உயிருக்குப் போராடிய போது துளி கூட இரக்கமில்லாமல் படம் பிடித்த கணவனின் செயல், அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.