ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்.. மர்மமான முறையில் இறந்து கிடந்த மாணவி!

 
 ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மாணவியின் மர்மமான மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள காமர்ஹட்டியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மாணவி ஐவி பிரசாத்.

சொந்த சகோதரனை அடித்தே கொலை செய்த கொடூர அக்கா!! பிணம்

இந்த நிலையில், மாணவியின் தாய் தனது மகளுக்கு போன் செய்தார். மாணவி பதிலளிக்காததால், சந்தேகமடைந்த தாய் அறைக்குள் சென்று சோதனை செய்தார். அப்போது, ​​தனது மகள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்து, தனது மகள் இயற்கைக்கு மாறான முறையில் இறந்துவிட்டதாக புகார் அளித்தார்.

போலீஸ்

அந்தப் புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி பணியில் இருந்தபோது ஆர்.ஜி. கர் அரசு மருத்துவமனையில் முதுகலை படிப்பில் இரண்டாம் ஆண்டு படிக்கும் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web