சினிமா பாணியில் அதிர்ச்சி சம்பவம்.. பெண் வேடமிட்டு லேடிஸ் ஹாஸ்டலுக்குள் நுழைந்த இளைஞருக்கு தர்ம அடி!

 
பெண் விடுதி

சினிமா பாணியில் பெண்கள் விடுதிக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் வார்டனிடம் சிக்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இருபத்தைந்து வயது ஆண் ஒருவர் பெண் வேடமிட்டு பெண்கள் விடுதிக்குள் நுழைந்தார். அப்போது விடுதி பெண் வார்டன் அவரை பார்த்து சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து, மாணவிகளும், ஊழியர்களும் திரண்டனர்.


பெண் வேடமணிந்த ஒரு பையன் அவர்களிடம் சிக்கிக் கொள்கிறான். பெண் வார்டன் கைக்கு கிடைத்ததை வைத்து அடிக்கிறார். மேலும், மாணவிகள் மற்றும் ஊழியர்கள் இளைஞரை அடித்து இழுத்துச் சென்றனர். இந்த வீடியோ எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.

இதுதொடர்பான வீடியோவை தற்போது @gharkalesh X கணக்கில் வெளியிட்டுள்ளது, அதில் "பெண் வேடமணிந்து பெண்கள் விடுதிக்குள் பதுங்கியிருந்த ஆண் பிடிபட்டான்" என்ற தலைப்பில் பகிரப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web