கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி - இளம்பெண்ணைக் காட்டுப்பகுதிக்கு வரவழைத்து மயக்க மருந்துக் கொடுத்து பாலியல் அத்துமீறல்!

 
பாலியல்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில், வாங்கிய கடனைத் திருப்பித் தராமல் ஏமாற்றியதுடன், கடன் கொடுத்த பெண்ணைக் காட்டுப் பகுதிக்கு வரவழைத்து மயக்க மருந்து கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற நபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பர்கூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் ஒரு பெண்ணிடமிருந்து ரூ.5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அந்தப் பணத்தைத் திருப்பித் தருவதாகக் கூறி அவர் அப்பெண்ணைக் காட்டுப்பகுதிக்கு வரவழைத்துள்ளார்.

பாலியல் பலாத்காரம் இளம்பெண்

காட்டுப்பகுதிக்குச் சென்ற அந்தப் பெண்ணிற்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட வெங்கடேஷ் முயன்றுள்ளார். இச்செயலுக்கு அவரது உறவினரான இளங்கோ என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார்.

மயக்கம் முழுமையாக ஏற்படுவதற்குள் சுதாரித்துக்கொண்ட அந்தப் பெண் அங்கிருந்து தப்பியோடி உடனடியாகத் தனது பெற்றோருக்குத் தொலைபேசி வாயிலாகத் தகவல் தெரிவித்துள்ளார். பெற்றோரின் உதவியுடன் மீட்கப்பட்ட அந்தப் பெண் பர்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட காவல்துறையினர், வெங்கடேஷ் மற்றும் இளங்கோ ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.