அதிர்ச்சி வீடியோ.. காசா பெண்களின் உள்ளாடையுடன் விளையாடும் இஸ்ரேல் ராணுவ வீரர்கள்!

 
இஸ்ரேல் ராணுவ வீரர்கள்

காசா நகரில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் இருவர் பெண்களின் உள்ளாடையுடன் விளையாடும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, ஹமாஸ் உறுப்பினர்கள் அதிகம் உள்ள காசா நகரை இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்கி வருகிறது. இரு தரப்பு தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் சுமார் 1,200 பேர் இறந்ததாகக் கூறப்படுகிறது, அதே நேரத்தில் காசா நகரில் 20,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.

காசா நகரில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள். இதன் காரணமாக காசா நகரின் மீதான தாக்குதலை நிறுத்துமாறு உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. எனினும், ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழிக்கும் வரை போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தொடர்ந்து கூறி வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், காஸா நகரில் உள்ள இஸ்ரேலிய ராணுவ வீரர், ஒரு பெண்ணின் உள்ளாடைகளை எடுத்து, தூங்கிக் கொண்டிருந்த மற்றொரு இஸ்ரேலிய ராணுவ வீரரின் முகத்தில் காட்டியுள்ளார். ஏற்கனவே, இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பெண் கைதிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இரு ராணுவ வீரர்களின் இந்த செயல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது இஸ்ரேல் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீன பெண்களின் நிலை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

இந்த புகைப்படங்களின் நம்பகத்தன்மையை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது. இது குறித்து ஐ.நா மனித உரிமைகள் அலுவலக செய்தி தொடர்பாளர் ரவீனா ஷம்தாசனி கூறுகையில், இதுபோன்ற படங்களை வெளியிடுவது பாலஸ்தீன பெண்களையும், அனைத்து பெண்களையும் இழிவுபடுத்தும் விதமாக உள்ளது. இதற்கு இஸ்ரேல் ராணுவம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இந்த செய்தியை அறிந்த இஸ்ரேல் ராணுவம் இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் ராணுவ வீரர்களிடம் தற்போது விசாரணை நடத்தி வருகிறது. இதுபோன்ற செயல்களை ஏற்க முடியாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெளிவுபடுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web