அதிர்ச்சி... 4 குழந்தைகளுடன் அக்கா- தங்கை கிணற்றில் குதித்து தற்கொலை!

 
சிறுமிகள்

மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில் சில மணி நேர இடைவெளியில் நடந்த இரு துயரச் சம்பவங்களில், இரண்டு சகோதரிகள் மற்றும் அவர்களது நான்கு குழந்தைகள் உயிரிழந்தனர். உயிரிழந்த பெண்களில் ஒருவர் எட்டு மாத கர்ப்பிணி என்றும், அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மாணவி இளம்பெண் சடலமாக சடலம் தற்கொலை கொலை

கூங்கர்காவ் கிராமத்தைச் சேர்ந்த அஞ்சலி ராவத் (35), புதன்கிழமை மதியம் தனது 6 வயது மகன் பிரசாந்துடன் கிணற்றில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். அப்போது உடனிருந்த அவரது மூன்று மகள்களும் தப்பித்து, குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தனர். சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் கணவரை இழந்த அஞ்சலி மன உளைச்சலில் இருந்ததாகக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

இதற்குப் பிறகு, அஞ்சலியின் சகோதரி சீதா ராவத் (40), தனது குழந்தைகளான ராக்கி (14), பிரியங்கா (11), ஷ்லோக் (6) ஆகியோருடன் சென்றிருந்த நிலையில், அவர்கள் நால்வரும் கிணற்றில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர்.

பிரசவம் கர்ப்பிணி

இரு சகோதரிகளும் நெருக்கமாகப் பழகி வந்ததாகக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அஞ்சலியின் மரணச் செய்தியால் ஏற்பட்ட அதிர்ச்சி சீதாவின் மரணத்துக்குக் காரணமாக இருக்கலாம் என உறவினர்கள் சந்தேகிக்கின்றனர். எனினும், இரு சம்பவங்களுக்கும் நேரடித் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்படவில்லை. இரு சம்பவங்கள் குறித்தும் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.