அதிர்ச்சி.. சென்னையில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற மாணவன் உயிரிழப்பு - உடல் உறுப்புகள் தானம்!

 
குத்துச்சண்டை

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியின் போது தலையில் பலத்த காயமடைந்து மூளைச்சாவு அடைந்த பள்ளி மாணவனின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க அவரது பெற்றோர் முன்வந்துள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் அம்பத்தூரைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவர் ஹரீஷ் கலந்து கொண்டார். அப்போது எதிர்பாராத விதமாகத் தலையில் பலத்த அடிபட்டு அவர் மேடையிலேயே மயங்கி விழுந்தார்.

குத்துச்சண்டை

உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாணவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுவிட்டதாகத் தெரிவித்தனர்.

தன்மகன் இறந்த சோகத்திலும், மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றும் நோக்கில் மாணவர் ஹரீஷின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க அவரது பெற்றோர் மனமுவந்து ஒப்புதல் அளித்துள்ளனர்.