அதிர்ச்சி... முதல்வர் மருந்தகத்தில் புகுந்து இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து.. வாலிபர் வெறிச்செயல்!

 
கத்திக்குத்து

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள முதல்வர் மருந்தகத்தில் பணியில் இருந்த இளம் பெண் ஊழியரைக் கத்தியால் குத்திய இளைஞரை பொதுமக்களின் உதவியுடன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி காமராஜ் நகரில் அமைந்துள்ள முதல்வர் மருந்தகத்தில் 23 வயது இளம் பெண் ஒருவர் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். வழக்கம் போல் பணியில் இருந்தபோது அங்கு வந்த சந்தோஷ் என்ற இளைஞர், அப்பெண்ணைத் திடீரெனக் கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

க்

இது குறித்து தகவலறிந்து வந்த பண்ருட்டி காவல்துறையினர், படுகாயமடைந்த பெண்ணை மீட்டு உடனடியாகப் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாக்குதலுக்குப் பிறகு அங்கிருந்து தப்பியோட முயன்ற சந்தோஷை அங்கிருந்த பொதுமக்கள் மடக்கிப் பிடித்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுமாறு சந்தோஷ் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகவும், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்து இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு கனிமொழி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.