அதிர்ச்சி... “முதலமைச்சர் விஜய்க்கு மாட்டு வண்டி ஓட்டியவர் தேடப்படும் குற்றவாளி”!

 
விஜய் மாட்டுவண்டி

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது முதலமைச்சர் விஜய் மாட்டு வண்டி ஓட்டிச் சென்ற நிகழ்வு பெரும் பேசுபொருளான நிலையில், தற்போது அதுகுறித்த கடுமையான அரசியல் குற்றச்சாட்டை அதிமுக தரப்பு முன்வைத்துள்ளது.

தாராபுரத்தில் முதல்வர் விஜய்க்காக மாட்டு வண்டியை இயக்கிய நபர் காவல்துறையால் தேடப்படும் குற்றவாளி என்று அதிமுக நிர்வாகி ஒருவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்புதான் அந்த நபர் அதிமுகவில் இருந்து மிரட்டப்பட்டுத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மாட்டு வண்டி

மேலும், தாராபுரம் தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த பல நிர்வாகிகளைத் தவெகவில் சேருமாறு ஆளுங்கட்சியினர் மற்றும் அமைச்சர்களால் கடுமையான மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகவும் அதிமுக தரப்பில் பரபரப்பான புகார்கள் எழுப்பப்பட்டுள்ளன. நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள சூழலில், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் பிரச்சாரக் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது.