அதிர்ச்சி... மட்டன் சாப்பிட்ட இளைஞர் மூச்சுத்திணறி உயிரிழப்பு - சாப்பிடும் போது கவனிக்க வேண்டியவை என்னென்ன?

 
மட்டன் இறைச்சி சிக்கன் மட்டன் இறைச்சி சிக்கன்

தெலங்கானா மாநிலத்தில் மட்டன் சாப்பிடும்போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில், விவசாயி ஒருவர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. "உணவருந்தும் போது பேசக்கூடாது" என்கிற முன்னோர்களின் அறிவுரையை அலட்சியப்படுத்தியதன் விளைவாக இந்தத் துயரம் நேர்ந்துள்ளது.

தெலங்கானாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர், நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் அமர்ந்து மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டே உணவு சாப்பிட்டுள்ளார். வீட்டில் மட்டன் சமைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் பேசிக்கொண்டே இறைச்சியைச் சாப்பிட்டபோது, எதிர்பாராதவிதமாக ஒரு பெரிய இறைச்சித் துண்டு அவரது தொண்டையில் சிக்கிக் கொண்டது.

சிக்கன் பக்கோடா

தொண்டையில் சிக்கிய இறைச்சியால் அவருக்குத் திடீரென கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அவர் திக்கித் திணறி மயங்கி விழுவதைப் பார்த்துக் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து, உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் பரிதாபமாகத் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "சாப்பிடும்போது சிரிப்பதோ அல்லது உற்சாகமாகப் பேசுவதோ மிக ஆபத்தானது. நாம் பேசும்போது மூச்சுக்குழாய் திறந்திருக்கும். அந்த நேரத்தில் உணவை விழுங்கினால், அது உணவுப்பாதைக்குப் பதில் தவறுதலாக மூச்சுக்குழாய்க்குள் சென்று அடைத்துக் கொள்ளும். இது சில நிமிடங்களிலேயே மூச்சுத்திணறலை ஏற்படுத்தி மரணத்திற்கு வழிவகுக்கும்" என எச்சரித்துள்ளனர்.

பள்ளி மானவி தற்கொலை

இது போன்ற நேரங்களில் பாதிக்கப்பட்டவரின் முதுகுக்குப் பின்னால் நின்று, அவரது வயிற்றின் மேல் பகுதியை அழுத்தித் தூக்குவதன் மூலம் தொண்டையில் சிக்கிய பொருளை வெளியேற்ற முடியும். இந்த முதலுதவி சிகிச்சை முறையை அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம். மகிழ்ச்சியாகச் சாப்பிட வேண்டிய நேரத்தில் நிகழ்ந்த இந்த உயிரிழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.