கோவில்பட்டி சிறுவன் கொலையில் திடீர் திருப்பம்... ஆட்டோ ஓட்டுநர் கைது!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சிறுவன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பெற்றோர், உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் முருகன் - பாலசுந்தரி தம்பதியின் மகன் கருப்பசாமி(10). இவர் கடந்த டிசம்பர் 9ம் தேதி காணாமல் போன நிலையில், மறுநாளான டிசம்பர் 10ம் தேதி அதிகாலையில் பக்கத்து வீட்டு மாடியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் 2 ஏடிஎஸ்பி, 4 டிஎஸ்பிக்கள் அடங்கிய 12 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை காந்திநகர் பகுதியைச் சேர்ந்த 36 பேரை சந்தேகத்தின் பேரில் அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால், சிறுவன் இறந்து 5 நாட்களாகியும் இதுவரை குற்றவாளிகளை அடையாளம் காண முடியவில்லை.

இந்நிலையில், உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சிறுவனின் தாய் பாலசுந்தரி மற்றும் உறவினர்கள் கோவில்பட்டி பிரதான சாலையில் இளையரசனேந்தல் சாலை விலக்கு பகுதியில் நேற்று காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். டிஎஸ்பி ஜெகநாதன் தலைமையில் வந்த போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், கஸ்தூரிபாய் தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கருப்பசாமியை (33) போலீசார் நேற்று கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
