அதிர்ச்சி வீடியோ... கிரேன் விழுந்ததில் 2 தொழிலாளர்கள் உடல்நசுங்கி பலி!
ஹரியானா மாநிலத்தில் கிரேன் மூலம் ஜெனரேட்டரை மேலே உயர்த்த முயன்ற போது எதிர்பாராதவிதமாக கிரேன் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா தொழிற்பேட்டை பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில், கிரேன் உதவியுடன் ஜெனரேட்டர் ஒன்றை 4-வது தளத்திற்கு உயர்த்தும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக நிலைகுலைந்த கிரேன் அப்படியே தலைகீழாகக் கவிழ்ந்தது. இதில் 4-வது தளத்தில் ஜெனரேட்டருடன் இருந்த 2 தொழிலாளர்கள் அப்படியே கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கவிழ்ந்த கிரேன் அங்கிருந்த மின் கம்பத்தின் மீது பலமாக மோதியதால் அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இக்கொடூர விபத்தின் நேரடிக் காட்சிகள் அங்கிருந்த செல்போனில் பதிவாகி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
