அதிர்ச்சி வீடியோ... அரசுப் பேருந்தில் கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய காங்கிரஸ் எம்.எல்.ஏ!
தெலுங்கானாவில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவியிடம் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அத்துமீறிய செயல் பதிவாகியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவில் இப்ராகிம்பட்டினம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் மல்ரெட்டி ரங்கா ரெட்டி (70). பெண்களுக்கான மகாலட்சுமி இலவச பேருந்து பயணத் திட்டம் மக்களைச் சரியாகச் சென்றடைகிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக அவர் அரசுப் பேருந்து ஒன்றில் ஏறிப் பயணம் செய்துள்ளார்.
பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, அருகில் அமர்ந்து கல்லூரி மாணவி ஒருவரிடம் பேசிய அவர், இத்திட்டம் மூலம் பெரும் சேமிப்பு கிடைப்பதாகக் கூறிக் கொண்டே மாணவியைத் தொட்டுப் பேசியுள்ளார். நின்று கொண்டிருந்த அந்த மாணவி இதனை விரும்பாமல் நகர்ந்து செல்ல முயன்ற போதும், எம்.எல்.ஏ தொடர்ந்து அவரது கையைப் பிடித்தபடி பேச முயன்றார்.
இந்தச் சம்பவம் பேருந்தில் இருந்த மற்றவர்களால் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது. இதற்குப் பல்வேறு தரப்பினரும் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருவதுடன், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ மீதும் காவல்துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
