அதிர்ச்சி வீடியோ... அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து... 11வது மாடியிலிருந்து குதித்து தப்பிய இளம்பெண்!

 
தீ விபத்து மாடியிலிருந்து குதித்த

ஜெர்மனி நாட்டின் தலைநகர் பெர்லினில் உள்ள ஃபிரைட்ரிச்ஷைன் பகுதியில் அமைந்து இருக்கும் உயர்மட்டக் குடியிருப்புக் கட்டடத்தில் திடீரெனப் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. ஓஸ்ட்‌பான்ஹோஃப் ரயில் நிலையத்திற்கு அருகே நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் ஒரு பெண் 11வது மாடியில் இருந்து குதித்து தீயணைப்பு வீரரின் கைகளில் விழுந்து உயிர் தப்பிய காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

கட்டடத்தின் 11வது மாடியில் உள்ள பால்கனியில் இருந்து தொடங்கிய தீ, அடுத்தடுத்த தளங்களுக்கும் வேகமாகப் பரவியது. அடர்ந்த புகையும் தீப்பிழம்பும் சுழ்ந்ததால் அங்கு வசித்த பெண் ஒருவர் சன்னல் சட்டத்தில் ஏறி நின்றபடி தவிக்கத் தொடங்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையின் ஏணி வாகனம் 9வது மாடி வரை மட்டுமே எட்டக்கூடிய அளவில் இருந்தது.

வேறு வழியின்றி, 9வது மாடியில் இருந்த தீயணைப்பு வீரரின் மீட்புக் கூடையை நோக்கி 11வது மாடியில் இருந்த அப்பெண் துணிச்சலாகக் குதித்தார். கூடையில் இருந்த தீயணைப்பு வீரர் அவரைப் பத்திரமாகப் பிடித்துக் கொண்டார். சுமார் 116-க்கும் மேற்பட்ட தீயணைப்பு மீட்புப் பணியாளர்கள் விரைந்து செயல்பட்டு சுமார் 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

தீ வி

இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்ட 13 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது.