அதிர்ச்சி வீடியோ... தேர்ச்சக்கரம் ஏறி 5 வயது பெண்குழந்தை பலி... திருவிழாவில் சோகம்!

 
ஷேத்ரா

 பங்குனி மாதம் இந்தியா முழுவதும் பல கோவில்களில் உற்சவங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டங்குளங்கரா தேவி கோவில் பிரசித்தி பெற்றது. இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும்  சமய விளக்கு திருவிழா வெகுவிமரிசையாக நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.


 

இந்தத் திருவிழாவில்  பெண்களை போன்று வேடமிட்டு ஆண்கள்,விளக்குகள் ஏந்தி அம்மனை வழிபாடு செய்வர்.  அத்துடன்  திருநங்கைகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு அம்மனுக்கு வழிபாடு நடத்துவர்.  இவ்வருடம் நடைபெற்ற திருவிழாவில்  ரமேஷ் -ஜிஜி தம்பதியினர் தங்கள் 5  வயது மகள் ஷேத்ராவுடன் கலந்து கொண்டனர். கட்டுக்கடங்காத கூட்டத்தினால் ஏற்பட்ட நெரிசலில் தனது தந்தையின் கையில் இருந்த ஷேத்ரா தவறி கீழே விழுந்தார்.

ஷேத்ரா
 

அச்சமயம் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த தேர் குழந்தையின் மீது ஏறி இறங்கியது. இதில் படுகாயம் அடைந்த குழந்தையை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து சவாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web