அதிர்ச்சி வீடியோ... பெங்களூர் விமான நிலையத்தில் பெரும் விபத்து தவிர்ப்பு!

 
இண்டிகோ

மங்களூருவில் இருந்து பெங்களூரு நோக்கிப் புறப்பட இருந்த இண்டிகோ விமானத்தில், ஓடுபாதையில் வேகமாகச் சென்றுகொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. விமானி சரியான நேரத்தில் செயல்பட்டு விமானத்தை நிறுத்தியதால், அதில் இருந்த 229 பயணிகள் உட்பட 236 பேர் காயமின்றி உயிர் தப்பினர்.

கடந்த 16-ம் தேதி மாலை 6.30 மணியளவில் மங்களூரு விமான நிலையத்தில் இருந்து பெங்களூருவுக்கு இண்டிகோ விமானம் புறப்படத் தயாரானது. விமானம் ஓடுபாதையில் வேகமாகச் சென்றுகொண்டிருந்தபோது, புறப்படுவதற்கு சில வினாடிகளுக்கு முன்பு தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். இதையடுத்து உடனடியாக அவசரமாக பிரேக் போட்டு விமானத்தை நிறுத்தினார்.

தொடர்ந்து விமானத்தில் இருந்த 229 பயணிகள் மற்றும் 7 பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். விமானம் தொழில்நுட்ப ஆய்வுக்காக இயக்கத்திலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டது.

இண்டிகோ

பயணிகளின் பயணத்தைத் தொடர மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. இருப்பினும், 229 பயணிகளில் 34 பேர் மட்டுமே அந்த விமானத்தில் பயணம் செய்தனர். விமானியின் துரிதமான நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.