அதிர்ச்சி வீடியோ.... சுக்குநூறாய் தீப்பிடித்து நொறுங்கிய விமானம்.... 72 பேரின் கதி?!

 
விமானம்

அதிர்ச்சி வீடியோ.... சுக்குநூறாய் தீப்பிடித்து நொறுங்கிய விமானம்.... 72 பேரின் கதி?!


விமான பணியாளர்கள் 5 பேர் உட்பட 72 பேருடன் பயணித்த அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மோசமான வானிலை மற்றும் அதிகளவு பனிமூட்டம் காரணமாக  அக்டாவ் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கும் போது ஓடுபாதை தவறியதில் தீப்பிடித்து எரிந்து நொறுங்கி கோர விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த 67 பயணிகள் மற்றும் 5 பணியாளர்களின் கதி என்ன என்கிற பதைபதைப்பு ஏற்பட்டுள்ளது. 

அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஜே2-8243 விமானம், பாகுவில் இருந்து க்ரோஸ்னிக்கு இயக்கப்பட்டது. கஜகஸ்தானில் உள்ள அக்டாவ் விமான நிலையம் அருகே மோசமான வானிலை காரணமாக அவசரமாக தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது என்று நாட்டின் அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

விமானம் தரையிறங்குகையில் தீப்பிடித்து எரிந்து விபத்திற்குள்ளாகும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியளிக்கிறது. எம்ப்ரேயர் 190 விமானம் க்ரோஸ்னியில் பனிமூட்டம் காரணமாக அக்டாவ் நகருக்குத் திருப்பிவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட நிலையில் அவசரமாக தரையிறங்குகையில் விபத்து நேரிட்டுள்ளது.

விபத்து ஏற்படுவதற்கு முன்பாக, விமானம் காஸ்பியன் கடலுக்கு மேல் ஒரு "SOS" சமிக்ஞையை வழங்கியது. விமான நிலையத்திற்கு மேலே பலமுறை வட்டமடித்தது. பறவைகள் கூட்டத்துடன் மோதியதால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம்

இந்த விபத்தின் போது விமானத்தில் 67 பயணிகளும் 5 பணியாளர்களும் இருந்ததாக தெரிய வந்துள்ளது. அக்டாவ் நகரில் இருந்து சுமார் 3 கிமீ தொலைவில் அவசரமாக தரையிறங்க விமானம் முயன்ற நிலையில், இறுதியில் பாதுகாப்பாக ஓடுபாதையை விமானத்தால் அடைய முடியவில்லை என்று கூறப்படுகிறது.

அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் இந்த விபத்தை உறுதி செய்துள்ளதோடு மேலதிக தகவல்கள் வெளியிடப்படும் என்று கூறியுள்ளது. இந்த விபத்து பயணிகளின் பாதுகாப்பு மற்றும் பாதகமான வானிலை நிலைகளில் வணிக விமானங்களின் செயல்பாட்டு நெறிமுறைகள் குறித்து குறிப்பிடத்தக்க கவலைகளை எழுப்பியுள்ளது.

From around the web