அதிர்ச்சி வீடியோ... பேரணியில் இளைஞரின் மார்பில் முரட்டுக்குத்து குத்திய ராகுல்காந்தி!

 
ராகுல் காந்தி குத்து

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி 'இந்தியா' கூட்டணி சார்பில் நடைபெற்ற உச்ச நீதிமன்ற நோக்கிய பேரணியின் போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன்னை நெருங்கி வந்த இளைஞரை கைமுட்டியால் தள்ளும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

தலைமைத் தேர்தல் ஆணையகத்தின் செயல்பாடுகளைக் கண்டித்து டெல்லியில் நடைபெற்ற இந்தப் பேரணியில் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். அப்பொழுது ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில், ராகுல் காந்திக்கு அருகில் கோஷமிட்டவாறே வந்த இளைஞர் ஒருவர் அவர் மீது மோதுவது போல் எதிர்பாராதவிதமாக நெருங்கினார்.

கூட்ட நெரிசலில் திடீரென அருகில் வந்த அந்த இளைஞரைச் சமாளிக்கும் விதமாக, ராகுல் காந்தி தனது கைமுட்டியால் அவரது வயிற்றில் தள்ளியதாகக் கூறப்படும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன. இதில் அந்த இளைஞர் சற்று நிலைகுலைந்து விலகிச் செல்வதும் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் நிலையில், ஒரு முக்கிய அரசியல் கட்சியின் தலைவராகப் பொதுவெளியில் நடந்து கொள்ளும் விதம் குறித்தும், ராகுல் காந்தியின் இச்செயல் தொடர்பாகவும் பலரும் பல்வேறு விதமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.