அதிர்ச்சி வீடியோ.. வயதான அம்மாவை கொடூரமாக தாக்கும் மகன்..!

 
அம்மாவை தாக்கும் மகன்

தாயை கொடூரமாக தாக்கும் மகனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் வழக்கறிஞர் ஒருவர் தனது 73 வயது தாயை தனது மனைவி மற்றும் மகன் முன்னிலையில் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் X தளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. தனது தாய் வயதான பெண் என்று கூட பார்க்காமல் மிகவும் மூர்க்கமாக தாக்குதல் நடத்திய மகனின் செயலுக்கு சமூக வலைதளத்தில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மூதாட்டியின் மகள் தீப்ஷிகா, தனது தாயின் உடல் நிலையில் சந்தேகம் அடைந்து தாய் ஆஷாராணியின் அறையில் இருந்த சிசிடிவி மேகராவை ஆய்வு செய்த போது தான் இந்த கொடூர சம்பவம் குறித்து அவருக்கு தெரிய வந்தது. சிசிடிவி காட்சிகளை காட்டி தீப்ஷிகா காவல் துறையில் புகார் அளித்ததை தொடர்ந்து அங்கூர் வர்மாவை போலீசார் கைது செய்தனர்.


பாதிக்கப்பட்ட ஆஷா ராணி, மாரடைப்பால் தனது கணவர் உயிரிழந்த பிறகு தனது மகன், மகள் மற்றும் மருமகளுடன் பஞ்சாப் மாநிலம் ரோபரில் வசித்து வந்தார். ஆஷா ராணி தனது மகன் அங்கூர் மற்றும் அவரது மனைவி சுதா ஆகியோர் தன்னை கொடுமை படுத்துவதாக அடிக்கடி தனது மகள் தீப்ஷிகாவிடம் கூறி வந்தார். தொடர்ந்து தாயின் உடல்நிலை மோசமாவதையடுத்து தீப்ஷிகா சிசிடிவி கேமராவில் இருந்து காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அதில் இருந்த காட்சிகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார் தீப்ஷிகா.

வீடியோவில் ஆஷாராணியின் பேரன் அவரது மெத்தையில் தண்ணீரை ஊற்றுவதும், பின்னர் ஆஷாராணி படுக்கையை நனைத்ததாக குற்றம் சாட்டுவது போன்ற காட்சிகள் இருந்துள்ளன. இதையடுத்து அங்கூரும் சுதாவும் மகன் சொன்னதைக் கேட்டுக் கொண்டு இந்த கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளார். வயதான தனது தாயின் முதுகு மற்றும் கன்னத்தில் அறைந்து தலைமுடியை பிடித்து இழுக்கும் கொடூரமான காட்சிகள் அந்த பதிவில் இருந்துள்ளது. அதோடு தனது தாயை மோசமான வார்த்தைகளால் அங்கூர் திட்டுவதும் சிசிடிவி பதிவில் இருந்தது.

சிசிடிவி காட்சி

இந்த காட்சிகளின் அடிப்படையில் தீப்ஷிகா அளித்த புகாரின் பேரில், காவல் துறை அதிகாரிகள் குழு, தொண்டு நிறுவன பிரதிநிதிகளுடன் ஆஷா ராணியின் வீட்டிற்கு சனிக்கிழமை வந்து அவரை மீட்டனர். அவர்களிடம் பேசிய அங்கூர், தனது தாயை நன்றாக கவனித்துக் கொள்வதாக கூறி நாடகமாடியுள்ளார்.  மேலும் அவரது தாயார் மனநிலை சரியில்லாமல் இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனாலும் போலீசார் நம்பவில்லை. ஆஷாராணியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.