அதிர்ச்சி வீடியோ.. கல்லூரிக்குள் புகுந்து மாணவியை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்ற கொடூரம்!

 
கல்லூரி

கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள மருத்துவக் கல்லூரி வளாகத்திற்குள் புகுந்து, மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பட்டப்பகலில் நடந்ததாகத் தெரிவிக்கப்படும் இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 


பாதுகாப்பு வசதிகள் உள்ள கல்லூரி வளாகத்திற்குள்ளேயே இத்தகைய சம்பவம் நிகழ்ந்துள்ளது மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், மாணவியைப் பாதுகாப்பாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

மாணவி இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்ததாகவும், அதன் பின்னணியில் இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்து மாணவியை அழைத்துச் சென்ற நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்